முல்லைத்தீவு – முள்ளியவளை நிராவிப்பிட்டி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் மீது குடும்பத்தகராறு காரணமாக கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் நீராவிப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 வயதுடைய முகமட் றஜாஜ் என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.