உயர்தர மாணவன் – மாணவி காதல் ஜோடி ஒன்று, ஒருவரையொருவர் பழிவாங்கும் உணர்வுடன் நிர்வாண அந்தரங்க புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
- Advertisement -
இருவரையும் அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
- Advertisement -
மாணவர்களான காதல் ஜோடி நிர்வாண மாணவன் கைது மாணவி காதல் ஜோடி ஒன்று, ஒருவரையொருவர் பழிவாங்கும் உணர்வுடன் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தளத்தில்

கடந்த மாதம் 20ஆம் திகதி இருவரும் கைது செய்யப்பட்டனர். அனுராதபுரத்திலுள்ள வெவ்வேறு பிரபலமான இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் அவர்கள். சில மாதங்களாக இருவரும் காதல் உறவில் இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவியின் ஸ்மார்ட் தொலைபேசியின் மதிப்பு 1,25,000 ரூபா எனவும், மாணவனின் ஸ்மார்ட் தொலைபேசியின் மதிப்பு 40,000 ரூபா என்பதும் தெரிய வந்தது.
இருவரிடமும் நவீன ஸ்மார்ட் தொலைபேசி இருந்ததால், தொலைபேசி காதலுடன் பரஸ்பரம் அந்தரங்க நிர்வாண புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.

சிறிது காலத்திலேயே இருவருக்கும் காதல் கசக்க, பிரிந்து விட்டனர். மாணவன் தன்னை ஏமாற்றியதாக, மாணவி தீராத வெறுப்பில் இருந்தார்.இதற்காக அவர் விபரீதமான வழியில் மாணவனை பழிவாங்க முடிவு செய்தார்.
போலி முகப்புத்தக கணக்கொன்றை ஆரம்பித்து, தன்னிடமிருந்த மாணவனின் அந்தரங்க புகைப்படங்களை அதில் பதிவிட்டார்.
தனது நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் திண்டாடிப் போன மாணவன், பின்னர் அவை எப்படி பதிவேற்றப்பட்டது என்பதை ஊகித்துக் கொண்டார்.
அவரும் போலி முகப்புத்தக கணக்கொன்றை ஆரம்பித்து, மாணவின் அந்தரங்க புகைப்படங்களை அதில் பதிவிட்டார். இதனால் கோபமடைந்த மாணவி மேலும் புதிய படங்களை பகிர, மாணவன் பதிலுக்கு புதிய படங்களை பகிர, சில நாட்கள் பேஸ்புக் அல்லோலகல்லோலப்பட்டது.

தனது அதிகளவான அந்தரங்க படங்கள் பதிவேற்றப்பட்ட பின்னர், இவ்வளவு விபரீதத்தை எதிர்பாராத மாணவி, சட்டரீதியான தீர்வை நாடினார்.
தனது பெற்றோருடன் சென்று, அனுராதபுரம் சிறுவர், பெண்கள் பிரிவில் முறையிட்டார். இதையடுத்து மாணவன் கைது செய்யப்பட்டார். கைதான மாணவன், மாணவி மீது முறைப்பாடு பதிவு செய்தார். இதனடிப்படையில் மாணவியும் கைது செய்யப்பட்டார்.
மாணவனின் தொலைபேசியை ஆய்வ செய்ததில், மாணவி அனுப்பிய 157 நிர்வாண புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மாணவியின் தொலைபேசியில் மாணவன் அனுப்பிய 110 நிர்வாண புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. காதலித்த காலத்தில் இருவரும் வகைதொகையில்லாமல் நிர்வாண படங்களை பரிமாறியுள்ளனர்.

இருவரும் அனுராதபுரம் பதில் நீதிவான் முன் ஆஜர்படுத்தப்பட்ட போது, தலா 100,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.
இருவரது கைத்தொலைபேசிகளும் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டு, பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு மேலதிக ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.