தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி இளைஞர்கள் நால்வர் காரில் பயணித்த பரபரப்பு அடங்குவதற்குள் அதேபோன்ற சம்பவமொன்று தற்போது மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெற்கு அதிவேக வீதியில், வீதி நடைமுறைகளை மீறி பயணித்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் தென்னிலங்கை பதிவைக்கொண்ட WP-CAC 9100 என்ற இலக்கமுடைய காரொன்று பயணித்த நிலையில் குறித்த காரின் ஜன்னல்கள் வழியாக இரு சிறுமிகள் அமர்ந்து பயணித்துள்ளனர்.
இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் புகைப்படம் எடுத்து, மன்னார் பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து , உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.