யாழ்.சாவகச்சோி நகரில் இன்று இரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
- Advertisement -
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து சாவகச்சோி நகரில் வீதியை கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
- Advertisement -

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை.