மாகாணசபை தேர்தலை உடனே நடத்தப் போவதாக அரசு ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினாலும், தற்போது அந்த ஆர்வம் தென்படவில்லை.
மாகாணசபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் சில இழுத்தடிப்புகளை மேற்கொள்ளலாமென தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -
அரச உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றினாலேயே அரசின் சுருதி இறங்கி விட்டதாக தென்னிலங்கை ஊடகத்தரப்பினரால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மாகாணசபை தேர்தல் நிலவரம் குறித்து அரச உளவுப்பிரிவின் அறிக்கையை அரச தரப்பு கோரியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கிராம மட்டத்தில் அரசாங்கத்தின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது, அரசாங்கத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றிய 10 இற்கும் அதிக பிக்குகள் தற்போது அரசிற்கெதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளமை உள்ளிட்ட தகவல்களை் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாகாணசபை தேர்தல் தள்ளிப்போகும் நிலைமையேற்பட்டுள்ளது.