தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், வீதி விதிமுறைகளை மீறி, காரொன்றில் பயணம் செய்த நால்வரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
நால்வர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய அந்த வாகனத்தின் யன்னல்களில், அமர்ந்திருந்து அந்த நால்வரும் பயணித்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் விநோதமாக பயணித்த அந்த கார், கண்டி நகரிலுள்ள ஒருவரின் பெயரிலேயே பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.