மாலிகாவத்தையில் ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 70 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மத்திய குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது இடம்பெற்றுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதை தெரிவித்தார்.

இதன்படி, 1.25 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் விசாரணை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் மாலிகாவத்தை பகுதியில் வசிக்கும் 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.