முழங்கால் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசநாயக்க ஆகியோர் சென்றுள்ளனர்.
இதன்போது கடந்த கால நிகழ்வுகளை அவர்கள் சுவாரஸ்யமாக நினைவு கூர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் சிறிது காலமாக நண்பர்களாக இருந்தபோதிலும், அரசியல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என தெரிவிக்கப்படுகிறது.