மன்னாரில் சிறியரக மகிழுந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
இந்த விபத்து சம்பவம் மன்னார் மதவாச்சி வீதியின் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இசைமாலைத்தாழ்வு பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த சிறிய ரக மகிழுந்தின் சாரதி நித்திரை தூக்கத்தினால் குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இதன்போது மரமொன்றுடன் மோதி தொடர்ந்து மற்றுமொரு பெரிய மரத்தில் மோதி மகிழுந்து நின்றுள்ளதாக விபத்தை நேரடியாக பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் விபத்தில் சாரதி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.