யாழ்.மாநகர முடக்கம் இன்று தளர்த்தப்படவுள்ள நிலையில் மக்கள் தங்களதும், தங்கள் குடும்பத்தினதும், சமூகத்தினதும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து செயற்படுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இதுவரை கிடைத்த PCT முடிவுகள் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் முடக்கம் தளர்த்தப்படுவதுடன் பயணிகள் பேருந்து சேவைகளையும் வழக்கமான இடங்களில் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன் வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்.நகருக்குள் அதிகளவான மக்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் அறிவுருத்தியுள்ளார்.
மேலும் வர்த்தகர்களும் சுகாதார நடைமுறைகள் பேணப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் சமூகத்தினது பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் மாவட்ட பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.