இலங்கையின் பெயரை ‘சிங்களே’ என மாற்ற வேண்டுமேன அண்மையில், ஸ்ரீ ரோஹன தரப்பைச் சேர்ந்த அனுநாயக்க ஒரே கஸ்யப தேரர் உள்ளிட்ட பிக்குகள் சிலர் கோரிக்கை ஒன்றினை முன்வைத்து இருந்தனர்.
- Advertisement -
இதன் காரணமாக, இலங்கை கட்டளைகள் நிறுவன வளாகத்தில் நேற்று முன் தினம் அமைதியின்மை ஏற்பட்டது.
- Advertisement -
நச்சு இரசாயனப் பொருட்கள் அடங்கிய உற்பத்திகள் தொடர்பில் கட்டளைகள் நிறுவனம் தகவல்களை வழங்காமையினாலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

உறுதி வழங்கியதைப் போன்று நச்சு இரசாயனப் பொருட்கள் அடங்கிய உற்பத்திகள் என்னவென்பதை அறியும் நோக்கில் சிங்களே அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு சென்றிருந்தனர்.
விஷம் அடங்கிய உணவுப் பொருட்களின் பட்டியலை வழங்குவதாக இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எனினும் சிங்களே அமைப்பின் உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு சென்ற போதிலும்இ வளாகத்திற்குள் பிரவேசிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அதன் பின்னர் பொலிஸார் தலையீட்டில் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரருக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்குள் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போதிலும், குறித்த உற்பத்தி பட்டியல் அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனிடையே, சிங்களே அமைப்பின் பொது செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரருக்கு இலங்கை கட்டளைகள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு குழு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்த அமைப்பின் செயலாளர் தனது முகநூலில் ஒரு குறிப்பை வெளியிட்டு, அங்கு இருந்தவர்கள் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரரை அச்சுறுத்தியதாகவும், மேலும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரரை சமூக ஊடகங்களில் திட்டுவதாகவும் சிங்கள அமைப்பின் செயலாளர் தனது முகநூலில் புகைப் படத்தையும் வெளியிட்டுள்ளார்.