தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் செயற்படுகின்றன எனினும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்தியே கட்சிகள் செயற்படுவதை காணகாடியதாக உள்ளது.
- Advertisement -
எனவே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியாதுள்ளன. இதன் காரணமாகவே அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன.
- Advertisement -
எனினும் இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி மக்களுக்கு வசதி வாய்ப்புக்களான வாக்குறுதிகளை வழங்காமல் தமிழ் மக்களுக்கான கல்வி, ஆங்கிலக்கல்வி, வருமான ஊக்குவிப்பு, விளையாட்டு மற்றும் கலாசார மேம்பாட்டுத் திட்டங்களில் செயற்படவுள்ளது.

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சியின் சேவை ஒரு மதத்துக்கான சேவையாக இருக்காது அனைத்து இனங்களிலும் புறந்தள்ளப்பட்டவர்களை சமூகத்தில் உயர்த்தும் கட்சியாக செயற்படும் எனவும் தமிழ் கல்வி மாநாடு ஒன்றை நடத்தி அதற்கூடாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி 10ஆண்டு திட்டத்தை முன்னெடுத்து . மக்கள் மத்தியில் சுய வருமான ஊக்குவிப்பு திட்டங்களுக்கு உந்துதலை வழங்கும் .
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை கல்வி மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை சிறப்பான முறையில் வழிநடத்தி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலும் பல சாதனைகளை நிலைநாட்டி அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்தது கொடுப்பது மட்டுமல்லாமல் கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழி மற்றும் தமிழர் கலாச்சாரத்தையும் உலகறிய செய்வதே தனது குறிக்கோள் என்று ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகர் வேலுசாமி முத்துசாமி தெரிவித்துள்ளார்