இலங்கையில் கொவிட் தடுப்பூசியை இதுவரை 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் 40 முன்னாள் எம்.பிக்களும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.நாடாளுமன்ற பணியாளர்கள் 800 பேரும் தடுப்பூசியை பெற்றுள்ளனர். எனினும் பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டுமெனத் தெரிவித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசியை ஏற்ற மறுத்து வருகின்றனர்.
- Advertisement -

இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உட்பட எட்டு எம்பிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.