தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதையடுத்து, மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு நிலவுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குருதி கொடையாளிகள் உடனடியாக குருதி வழங்கி உதவுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்டேன்லி டி மெல் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதியதில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை பேருந்து கடக்க முயன்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.