புத்தளத்தில் இருந்து கனடா செல்ல முயன்றவர்களை தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 11.03.2021 கடல்வழியாக தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை கடற்படையினர் புத்தளத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவர்கள் தரகர்கள் ஊடாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டு அங்கு விடுதி ஒன்றில் பல நாட்கள் தங்கவைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புத்தளத்திற்கு அழைக்கப்பட்டு வான் ஒன்றில் கற்பிட்டி களப்பிற்கு அருகில் இறக்கிவிடப்பட்ட வேளை இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளார்கள்.

இவர்களில் 9 பேர் மட்டக்களப்பையும் 6 பேர் யாழ்ப்பாணத்தையும் 5 பேர் முல்லைத்தீவையும் 3 பேர் திருகோணமலையையும் சேர்ந்தவர்கள என்றும் இவர்களை ஏற்றிச்சென்ற வாகனத்தின் சாரதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கற்பிட்டி பொvghghndலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது இவர்கள் தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.