கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இலவசமாக தம்மை பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
60 வயதுக்கும் மேற்பட்டோர் எவ்வித சிக்கலுமின்றி கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்காக இணையத் தளத்தின் ஊடாக தம்மை பதிவு செய்து கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.
- Advertisement -
அதற்கமைய கொழும்பு மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையதளத்தினூடாகவும் அல்லது e.channelling.com என்ற இணையதளத்தினூடாகவும் அல்லது e.channelling நடமாடும் சேவையூடாகவும் பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.