ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர் ஸ்தானிகரான மிச்செல் பச்லெட்டை இலங்கைக்கு அழைப்பது குறித்து இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் தெரிவித்தார். இலங்கை தொடர்பில் ஐ.நாவில் அவர் வெளியிட்ட தீர்மானத்தை அடுத்து அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் இலங்கை கவனம் செலுத்தி வந்தது. அந்த வகையில் அழைப்பிதழ் ஒன்றை அனுப்ப அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜெயநாத் கொலம்பகே அறிவித்தார்.
- Advertisement -

இவர் வருகையின் மூலம் நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீட்டைப் பெற முடியும் என நம்பப்படுகின்றது. இந்த விவகாரம் பரிசீலிக்கப்படுவதை உறுதிப்படுத்திய கொலம்பகே, எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். ஒரு முறையான அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அவர் இலங்கைக்கான பயணத்தை ஏற்றுக்கொண்டால், சமீபத்திய காலங்களில் இலங்கைக்கு வருகை தரும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான மூன்றாவது உயர் ஸ்தானிகர் இவர் ஆவார்.
- Advertisement -
2013 ஆம் ஆண்டில், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவனீதம் பிள்ளை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கைக்கு விஜயம் செய்தார். மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 2016 பிப்ரவரியில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகராக செய்ட் ராட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்தார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் முடிவில் முறையான அழைப்பை மிச்செல் பச்லெட்டுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.