மாத்தறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படையினரை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற சிறுவர்கள் மீது மோதியுள்ளது. களுத்துறை பிரதேச செயலகத்தின் முன்னால் நடந்து சென்ற இரு சிறுவர்கள் மீதே இவ்வாறு பேருந்து மோதியுள்ளது. இதில் சிப்பாய் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -

இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவன் ஒருவரும் சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.