ஜனாதிபதி கோட்டாபய கூறுவது போல அவசரமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தக் கோரினாலும் தேர்தலை நடத்த அரசாங்கத்தால் முடியாது எனவும் சட்டத்தை மாற்றாது அது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.