வெளிநாட்டு இராஜதந்திர நிறுவனங்களின் பணிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையிலான செயற்பாடுகளை அதிகரிக்குமாறு அரசாங்கம் புலனாய்வுப்பிரிவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது. இவ்வாறு தென்னிலங்கை ஊடகமொன்று தகவலை வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தூதரக அதிகாரிகள் யாரை சந்திக்கிறார்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்ற விபரங்களை சேகரிக்க புலனாய்வுப் பிரிவுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.