இன்னும் இரண்டு வாரங்களில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். தவறின் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். கொழும்பில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
- Advertisement -

அரசாங்கம் கொரோனா தடுப்பூசியை வழங்கத் தவறினால் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.