அண்மையில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனை தாக்கிய சம்பவத்தில் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பதில் நீதவான் லலித் பத்திரன இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
- Advertisement -

காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 8 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் தாக்குதலுக்குள்ளான மாணவனின் செவி புலன் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.