கொலம்பஸ் ஆய்வு கூடம் எனப்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை இலங்கையில் இன்றிரவு 7 மணி 8 நிமிடம் அளவில் நேரடியாக பார்க்க முடியும். தொலைநோக்கி கருவிகள் எவையும் இன்றி வெற்றுக்கண்களால் இலங்கையின் எந்த பகுதியில் இருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் அதனை பார்க்க முடியும். இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் இருந்து 400 கிலோ மீற்றர் உயரத்தில் பயணித்த வண்ணம் உள்ளது.
- Advertisement -


பூமியின் புவி ஈர்ப்பு சக்திக்கு அமைய அதன் வேகம் மாறுப்படும். சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை ஒருமுறை சுற்றிவர 92 நிமிடங்கள் மாத்திரமே எடுத்துக்கொள்கிறது.