பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, எதிர்வரும் 19 ஆம் திகதி பங்களாதேஷ் நாட்டிற்கு பிரதமர் விஜயம் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவினரிடம் வினவிய போது, இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
- Advertisement -

பிரதமர் பதவிக்கு வந்த பின் தனது இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதோடு பங்களாதேஷ் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு செல்கின்ற பிரதமர் மஹிந்த ராஜக்க்ஷ, இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த விஜயத்தின்போது அவர் பங்களாதேஷ் நாட்டின் அரச பிரமுகர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.