நாடு திரும்பும் இலங்கையர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

இந்த யோசனை தொடர்பாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபிள்ளையிடம் வினவிய போது, இன்னமும் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என அவர் தன்னிடம் பதில் அளித்ததாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.