முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வருகிற 15 ஆம் திகதி அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தற்போதைய முதலமைச்சரான பழனிசாமி போட்டியடவுள்ளார். மற்றைய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களும் வருகிற 15ஆம் திகதி அன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். அதேநேரம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் வரும் 15 ஆம் திகதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார்.
- Advertisement -

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன் காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.