இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று எதிர்வரும் 17 ஆம் திகதி புதன் கிழமை யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நீதிக்கான போராட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
