கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகரின் கோரிக்கைக்கு அமைய, கடமையில் உள்ள பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இந்நிலையில், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -

அந்த வகையில், 05 கையடக்க தொலைபேசிகள் ,14 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிக்கான 03 மின்னேற்றிகள், கத்தரிக் கோல்கள் 02, 28 போதைப் பொருள் பக்கட்டுக்கள், ஹெரோயின் போன்ற ஒரு வகை தூள் அடங்கிய டப்பா, புகையிலைத் துண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.