இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், மொரடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், ராகமை வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பொல்கஸ்ஓவிட பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவருமெ இன்று உயிரிழந்துள்ளனர்.