இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பல விதமான தேநீர்களை போட்டுக்குடிக்கலாம். அவை பின்வருமாறு… செம்பருத்திப்பூ தேநீர்: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம். துளசி இலை தேநீர்: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர்ரெடி.

இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். ஆவாரம் பூ தேநீர்: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். கொத்தமல்லி தேநீர்: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். புதினா இலை தேநீர்: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். கொய்யா இலை தேநீர்: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வை