பாடசாலை விடுமுறையை பயன்படுத்தி வீட்டுத்தோட்டத்தில் இஞ்சி பயிர் செய்கையில் ஈடுபட்டு நல்ல பயனைப் பெற்று மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக செயற்பட்டுள்ளனர். வவுனியா பண்டாரிகுளத்தில் வசிக்கும் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவரின் சிறுவயதுப் பிள்ளைகளான சாதுரியன் மற்றும் சாதுரியா கடந்த வருடம் இயற்கை பசளைகளை கொண்டு வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடுபட்டனர்.
- Advertisement -

அதிலும் சாதாரணமாக கத்தரி, மிளகாய் என்பவற்றை விட இஞ்சி, மஞ்சள் மற்றும் ராசவள்ளி என்பவற்றை பயிரிட்டிருந்தனர். குறித்த வீட்டுத்தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட ஒவ்வொரு இஞ்சியும் சுமார் 500 கிராமிற்கு அதிகமான விளைச்சலினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

பலரும் விடுமுறை என்றால் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனினும் கடந்த வருடம் பாடசாலைகளுக்கு நீண்ட விடுமறை கிடைத்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சுற்றுலா செல்வதனையோ கூடி விளையாடுவதனையோ தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இந்த முயற்சிக்கு ஆசிரியரான தந்தை சிறு உதவிகளை வழங்கிய நிலையில் முழுமையான தமது ஆர்வத்தினால் இன்று இஞ்சி அறுவடையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
