தமிழினப் படுகொலைக்கும், காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிவதற்குமே தாங்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலாசகர் கனகரட்ணம் சுகாஸ் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், காணி அபகரிப்பு உள்ளிட்ட ஏனைய விடயங்களை உள்ளக பொறிமுறையூடாக தீர்க்க முடியும் என யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சட்டத்தரணி சுகாஸ் தெளிவுப்படுத்தியுள்ளார்.
- Advertisement -

இதேவேளை, வடக்கு கிழக்கில் கடந்தவாரம் திடீரென ஏற்பட்ட மின்சார தடையின் போது, வடமாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -
அத்துடன், வடமாகாணத்திற்கு உரித்தான காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படும் பட்சத்தில், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள் இடம்பெறலாம் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலாசகர் கனகரட்ணம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.