சீனி இறக்குமதியின் போது 15.9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட சீனி மீதான வரியைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்பு காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
- Advertisement -

சீனி இறக்குமதிக்கான வரி 50 ரூபாயாக இருந்ததுடன் அந்த வரி 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையான காலத்தில் 25 சதமாக குறைக்கப்பட்டால், ஆயிரத்து 590 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய வரி மோசடி எனவும் சுனில் ஹந்துன்னெத்தி முன்னர் குற்றம்சாட்டியிருந்தார்.
- Advertisement -

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினரும் சீனி இறக்குமதியின் போது வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
