இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று ஸ்ரீலங்கா தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
- Advertisement -

இந்த விடயம் மிகவும் கவலையளிப்பதாகவும், இது தொடர்பில் இன்று காலை முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வௌிநாட்டு அமைச்சு மற்றும் தூதரகங்கள் ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அமேசான் (Amazon) இணையதளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளது. குறித்த பொருட்களை ஸ்ரீலங்காவினரும் பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் காணப்படுகின்றன. 12 அமெரிக்க டொலருக்கு குறித்த கால் துடைப்பானை விற்பனைக்கு பதிவிட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 9 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாதணிகள் 20 டொலருக்கு விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதுடன் அதற்கான விநியோக கட்டணமாக 10 டொலர்கள் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.