இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது பல இடங்களிற்கும் சென்று பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.
- Advertisement -

இதன் ஒரு அங்கமாக இந்தியாவினால் அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கும் சென்று புனரமைப்பு பணிகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து யாழ் பொது நூலகத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் யாழ் இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன் மாநகரசபை உறுப்பினர்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
- Advertisement -
