நாட்டிலுள்ள அனைத்து ச.தொ.ச விற்பனை நிலையங்களிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் சிவப்பு வெங்காயம், சிவப்பு அரிசி மற்றும் உள்ளூர் உருளைக் கிழங்கு ஆகயிவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன்படி தற்போது 300 ரூபாவுக்கு விற்பனையாகும் ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தை 195 ரூபாவுக்கும், ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கினை 150 ரூபாவுக்கும், 93 ரூபாவுக்கு விற்பனையாகும் ஒரு கிலோ சிவப்பு அரிசியை 89 ரூபாவுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

இந்த விலைகளானது இன்று முதல் அமுலுக்கு வரும் என்று வர்த்தக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த பெப்ரவரி முதல் 27 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளானது குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.