இலங்கையில் இன்றைய (10) தினம் கொரோனா தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி மரணித்தோரின் எண்ணிக்கை 515 இல் இருந்து 520 ஆக அதிகரித்துள்ளது: இதேவேளை இன்று (11) புதிதாக 292 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 134 பேரும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கமைவாக இலங்கையில் 86,685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 83,210 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.