கம்பஹா மாவட்டத்தில் கட்டுமான வேலை செய்யும் சுமார் 20 தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார்கள். குறித்த பணியாளர்கள் தங்கும் இடத்தை பரிசோதித்த சுகாதார அதிகாரிகள், மொத்தம் 56 தொழிலாளர்கள் ஒரு நெரிசலான கட்டடத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். கம்பஹா – ஹன்சாகிரி வீதியில் உள்ள தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -

இவர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்கனை பின்பற்றாமல் ஒன்றாக இருந்துள்ளனர். மேலும் குறித்த கட்டடத் தளத்தில் 240 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.