இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 515 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று இதுவரை, 300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.