துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் ஜெக்ரி தெரிவித்தார். இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள துனிசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், இந்த விபத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
- Advertisement -

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தெற்கு துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸ் கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 39 பேர் உயிரிழந்தனர். கடலோர காவல்படை 165 பேரை மீட்டது, எனினும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. விபத்தில் உயிரிழந்த அனைத்து குடியேற்றவாசிகளும் சகாரா – கீழமை ஆபிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார்.