வவுனியாவில் க.பொ.த. சாதாரண பரீட்சை நடைபெற்ற நிலையங்களை சுற்றி பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைகின்றது. பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 லட்சத்து 22 ஆயிரத்து 355 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அந்தவகையில் பரீட்சை நிறைவடைந்ததும் பரீட்சை நிலையத்திலோ அல்லது வளாகத்திலோ கலகத்தில் ஈடுபடும் பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் ரத்து செய்யப்பட்டு,கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.
- Advertisement -


அதனடிப்படையில் இன்று பிற்பகல் பரீட்சை முடிவடைந்த நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து பரீட்சை நிலையங்களிலும் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன், பரீட்சை நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு பணித்திருந்தனர்.
- Advertisement -
