HomeNewsகூந்தலை பாதிக்கும் பொடுகு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் !!

கூந்தலை பாதிக்கும் பொடுகு பிரச்சினைகளுக்கான தீர்வுகள் !!

பொடுகு பிரச்சினை இருந்தால் கூந்தல் வளர்வதில் ஏராளமான பிரச்சனைகள் வரும். முடி உதிர்தல், இள்நரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சினைகள் அதிகம் உண்டு.
சாம்பார் வெங்காயம் அதாவது சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து. பிறகு 15 நிமிடம் கழித்து குளிக்க பொடுகு தொல்லை நீங்கும். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம் வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது பொடுகுக்கு ரெம்ப நல்லது வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின்னர் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும். வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தேய்க்கலாம்.

தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம். மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து, இந்த கலவையை தலையில் தேய்த்து குளிக்கவேண்டும். வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து பின்பு குளிக்கலாம். மண்டை கரப்பான் நோய் குணமாக பப்பாளி பாலையும் படிகாரத்தையும் சேர்த்து தடவலாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments