விசா இல்லாமல் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரை தொடர்ந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சில வெளிநாட்டினரால் இணையத்தில் ஏராளமான நிதி மோசடிகள் பதிவாகியுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
இதையடுத்தே சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய காவல்துறை சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, கொல்லுப்பிட்டி பகுதியில் 08 தாய்லாந்தர்கள் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார். இதேவேளை விசா இல்லாமல் நாட்டில் தங்கியிருந்த மூன்று நைஜீரியர்கள் உட்பட 8 வெளிநாட்டவர்கள் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.