தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றின் முகாமையாளருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், குறித்த மதுபான நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அதில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட முகாமையாளர் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து தலவாக்கலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி மதுபான விற்பனை நிலையத்தில் மதுபானம் கொள்வனவு செய்தவர்கள் இருப்பின் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு, பொதுச் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.