கடந்த ஜனவரி முதல் விமான நிலையங்கள் மீள திறக்கப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாத்துறை இன்னும் இயல்பு நிலைமைக்கு திரும்பவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையினருக்கான சலுகைகளை மேலும் நீடிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான கடன் மற்றும் குத்தகை சலுகைகளை இந்த வருட இறுதி வரை நீடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளினால் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதிர்வரும் மே 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. எனவே இந்த சலுகைகளை நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.