இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர் ஜி. ஜி.ரத்னசிறியின் கையொப்பத்துடன் அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கொவிட் -19 பரவல் காரணமாக அரச பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
- Advertisement -

அத்துடன், சுகாதார வழிகாட்டுதல்களுடன் அரச அலுவலகங்களின் பணிகளை முன்னெடுக்க தேவையான பணியாளர்களை மாத்திரம் அழைக்கும் அதிகாரம் நிறுவனத்தின் தலைவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், இன்று முதல் வழக்கம் போல் அனைத்து அரச ஊழியர்களையும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.