ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களிடம் இலங்கை தொடர்பான முதன்மை குழுவில் இடம்பெற்று நாடுகளின் தூதுவர்கள் இருவர் வேண்டுகோள் விடுத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
- Advertisement -

இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் சரா ஹல்டன் தென்கொரிய தூதுவரையும் முன்னாள் அமைச்சர் மங்களசமரவீரவையும் இரண்டாம் திகதி சந்தித்துள்ளார் என அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என குறிப்பிட்டுள்ள அந்த ஊடகம் பங்களாதேசும் தென்கொரியாவும் மனித உரிமை பேரவையின் இம்முறை அமர்வில் வாக்களிக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது