ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக் குறிப்பில், ஆப்கானிஸ்தானின் ராகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஜரந்தாப் என்ற கிராமத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை அடிவாரத்தில் இருந்த கிராம மக்கள் பலர் இந்த பனிச்சரிவில் சிக்கி கொண்டனர்.
விபத்துக் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்புப் பணியில் இறங்கினர். எனினும் பனிச்சரிவில் சிக்கிய 14 பேர் சம்பவ பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர்.
- Advertisement -
இதனிடையே இந்த பனிச்சரிவில் சிக்கி பலர் மாயமானதாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர் – என தெரிவிக்கப்பட்டுள்ளது.