இன்று இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுமாயின் நாளை அது இந்தியாவிற்கும் நேரிடலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உலகத் தீவிரவாத அச்சுறுத்தல் பல நாடுகளுக்கும் உள்ளது. ஆகவே அனைத்து நாடுகளும் உலக தீவிரவாதத்தை கூண்டோடு அழித்தொழிக்க இணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்தியா எந்த அளவுக்கு மௌனமாக இருந்தாலும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் யோசனை கொண்டுவரப்பட்டால் அதற்கெதிராகவே வாக்களிக்கும்.
- Advertisement -
அதேபோல இந்திய பூகோள அரசியலை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டு தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில் அதனையும் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்தியாவும் இந்த தீர்மானத்தையே எடுக்கும் என்றார்.