பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
- Advertisement -

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து எல்ல – ஹல்ப பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, 10இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.